Saturday, August 7, 2010

போராடு போராடு

தாயின் கருவில்
அனுவாய் இருந்தேன்
காலம் சொன்னது
பூலோகம் காணலாம்
வந்துவிடு என்று

ஈர்நான்காம் மாதம்
எட்டிக்குதித்தேன்
அவசரத்தைப் பார்
அழிந்து விடப்போகிறான்
என்றது

நோயின் விழிம்பில்
பாயில் கிடந்தேன்
சொற்கேளாதவன்
குலத்திற்கு ஈனமென்றது

ஒடிநான் விளையாடினேன்
பிழைத்து விட்டான்
அதிஸ்டக்காரன்
என்றது

பள்ளி சென்று ஓதிவந்தேன்
குப்பைக்கு எதற்கு
குர்ஆன் என்றது

பாடம் சென்றுபடித்து வந்தேன்
அறிவாளை தீட்ட
அரமில்லை என்றது

தொழில் இன்றி தூங்கிக்கிடந்தேன்
பணமில்லாதவன் பிணம்
என்றது

பணம் உழைக்க
நானும் சென்றேன்
நம்பிவிட்டான் பணத்தை
இனி நாசமாவான் என்றது

அழகாய் நானும்
உடைகள் போட்டேன்
வேடனுக்கெதற்கு
வேட்டி என்றது

காதல் கொள்ள இதயம்
கேட்டேன்
கழுதைக்கு எதற்கு
கற்பூரம் என்றது

காதலி பின்னால்
சுற்றித்திரிந்தேன்
வேலையில்லாதவன்
விளையாடுகிறான் என்றது

அவளை நானும் திருமணம்
செய்தேன்
காமத்திற்கெதற்கு களியாணம்
என்றது

வெளிநாடு செல்ல தயாரானேன்
பிழைக்கத்தெரியாதவன்
பின்வாங்குகிறான் என்றது

இன்னும் சொல்லும் சமூகம்
சோர்ந்துவிடாமல் போராடு
உனது வெற்றி நிச்சயிக்கப்ட்டது
என்றது மனம்

No comments:

Post a Comment