Tuesday, August 31, 2010

ரோஜா

ஊமையாய்
படைக்கப்படு
ஊனமாய் 
உருவம் பெற்று
உன்னதக் காதலுக்கு
துாது சென்று
மௌனம் காத்துப் 
                                            புத்து நிற்கும்
                                            தேவதை.

இதயம்








இனப துன்பம்
குவிந்து கிடக்கும்
குப்பைத் தொட்டி
இதயம்.

ஊமைக் காதல்


கதலைச் சொல்ல
நினைத போது
வார்த்தை வந்து
சேரவில்லை
வார்த்தை வந்து
சேர்ந்த போது
ஜோடியுடன் அவளிருந்தாள்
தாடியுடன் நானிருந்தேன்.


                                                  ஸஹா றிஸ்வான் 

Sunday, August 29, 2010

நீ
அனிந்து வரும்
ஹபாயாவே
இன்று என்னை
புத்தகம் நடுவே
கவிதை எழுதவைக்கிறது  

Saturday, August 28, 2010

நட்பா காதலா?










வார்த்தைக்குள் பொடி
வைத்தவனே -உன்
வரைதாலில் இடிவைத்தாயோ
இப்படி வெடிக்கிறது

புரியவில்லை
சத்தியகமாகப் புரியவில்லை
அதைப்புரிந்து கொள்ளவும்
முடியவில்லை

உன் 
புதிருக்குள் சிக்குன்டு
தினம் புமிக்குள் 
புதைகிறேன்
உயிரைக் குடிக்கும் உயிரே
உன் உறவை -ஏன் 
மறந்தாய்
கனவில் வாழும் மானே
உன் காதல் வாழ்க்கை என்ன?

பதில் சொல்லத்துடிக்கிறேன் 
துயில்கொள்ளமறுக்கிறேன்
சீக்கிரம் வந்து நீ
சீர்திருத்தம்
செய்வாயா?  
                                    (என்னள்சுவடுகள்)   

Thursday, August 26, 2010

சிறு கவிதைகள்.

சில நேரங்களில்
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.

        
      முள்ளிருக்கும் ரோஜாவை
      எனக்குப் பிடிப்பதில்லை
      முள்ளில்லாத 
      ரோஜாவாய்
      அவள் இருப்பதால்.  

            

                       உனது நிழற்படம்                


         ஈா் ஜந்து மாதம்
         எம்மைச் சுமந்த நீயே
         எம்மை விட்டுப்போன பிறகும்
         உன் நிழற்படம் எம்மை
         ஆறுதல் படுத்துகிறது
                                                  உன்னை விட
                                                  உன் நிழற் படத்திற்கு
                                                  எம் மேல் அன்பு  
         அதிகம் போல.  

                                    ஸஹா றிஸ்வான்.

காணிக்கை



என்
மரணத்தன்று குட
நீ ஒரு துளிக்கண்நீரும்
சிந்த வேண்டாம்.
ஏன் தெரியுமா?
அன்று உன்
திருமணத்தன்றாய்
                                     இருக்கும்.   
                          
                                                       ஸஹா றிஸ்வான்   

Friday, August 20, 2010

தாஜ்மகால்

நீ
இன்றி
தாஜ்மகால் கட்டும்வரை 
உயிரோடிருக்க
சாஜகான் போல்
கொடியவனல்ல நான்

                                ஸஹா றிஸ்வான்  

Thursday, August 19, 2010

மழைத்துளி

ஈன்றவளிடம்
இருந்துகாவுகொண்டு
மீண்டும் அவளோடு
அனாதைகளாய் உறவாடும்
முத்து மணி
ரத்தினங்கள்.  

                    ஸஹா றிஸ்வான்.

முயன்று பார்

கசங்கிப்போன இதயத்தின்
கண்னீர்த் துளிகளை
காயவிடு
உப்புச் சுரக்கும் கண்ணீர் துளியின் உன்மையான
குறிக்கோளை மீட்டிப்பார்

வானத்தைக் கடக்க
முயற்சி செய்
வாகனத்தைப் பற்றி
கவலை கொள்ளாதே

நிலவினை கட்டியனைக்க
முயன்று பார்
ரசிப்பதை என்னி
பெருமைப்படு

ஏழாவது அறிவினைத் 
தேடுஆனால் 
ஆறாவது அறிவை 
விட்டுவிடாதே

அழகை ரசிப்பதை
பழக்கமாக்கு
அதற்காய் 
அவனின் மனைவியை 
ரசிக்காதே

                           ஸஹா றிஸ்வான் 


காதல் செய்

காதல் செய்யும்
வார்த்தையை உனக்கு
கற்றுத்தருகிறேன்.
அப்புரமாவது என்னைக்
காதல்செய்.

Saturday, August 7, 2010

போராடு போராடு

தாயின் கருவில்
அனுவாய் இருந்தேன்
காலம் சொன்னது
பூலோகம் காணலாம்
வந்துவிடு என்று

ஈர்நான்காம் மாதம்
எட்டிக்குதித்தேன்
அவசரத்தைப் பார்
அழிந்து விடப்போகிறான்
என்றது

நோயின் விழிம்பில்
பாயில் கிடந்தேன்
சொற்கேளாதவன்
குலத்திற்கு ஈனமென்றது

ஒடிநான் விளையாடினேன்
பிழைத்து விட்டான்
அதிஸ்டக்காரன்
என்றது

பள்ளி சென்று ஓதிவந்தேன்
குப்பைக்கு எதற்கு
குர்ஆன் என்றது

பாடம் சென்றுபடித்து வந்தேன்
அறிவாளை தீட்ட
அரமில்லை என்றது

தொழில் இன்றி தூங்கிக்கிடந்தேன்
பணமில்லாதவன் பிணம்
என்றது

பணம் உழைக்க
நானும் சென்றேன்
நம்பிவிட்டான் பணத்தை
இனி நாசமாவான் என்றது

அழகாய் நானும்
உடைகள் போட்டேன்
வேடனுக்கெதற்கு
வேட்டி என்றது

காதல் கொள்ள இதயம்
கேட்டேன்
கழுதைக்கு எதற்கு
கற்பூரம் என்றது

காதலி பின்னால்
சுற்றித்திரிந்தேன்
வேலையில்லாதவன்
விளையாடுகிறான் என்றது

அவளை நானும் திருமணம்
செய்தேன்
காமத்திற்கெதற்கு களியாணம்
என்றது

வெளிநாடு செல்ல தயாரானேன்
பிழைக்கத்தெரியாதவன்
பின்வாங்குகிறான் என்றது

இன்னும் சொல்லும் சமூகம்
சோர்ந்துவிடாமல் போராடு
உனது வெற்றி நிச்சயிக்கப்ட்டது
என்றது மனம்

Friday, August 6, 2010

தலையணைக்கு விடைகொடு

ஏன் அழுகிறாய்
உன் கண்கள்தான்
கரைந்துபோய் விட்டதே

ஆனால் விட்டுவிடாதே
உன் மனதை தளரந்துபோக

சகோதரியே
உன் விழிகளில் அருவிகள்
கண்டதில்லை நான்

ஆனால் கண்டுகொண்டேன்
அருவிகளே
உன் விழிகளானதை
எனக்கு தாகமெடுக்கிறது நீ
தலையணை நனைப்பதை நிறுத்து