Tuesday, August 31, 2010

ரோஜா

ஊமையாய்
படைக்கப்படு
ஊனமாய் 
உருவம் பெற்று
உன்னதக் காதலுக்கு
துாது சென்று
மௌனம் காத்துப் 
                                            புத்து நிற்கும்
                                            தேவதை.

இதயம்








இனப துன்பம்
குவிந்து கிடக்கும்
குப்பைத் தொட்டி
இதயம்.

ஊமைக் காதல்


கதலைச் சொல்ல
நினைத போது
வார்த்தை வந்து
சேரவில்லை
வார்த்தை வந்து
சேர்ந்த போது
ஜோடியுடன் அவளிருந்தாள்
தாடியுடன் நானிருந்தேன்.


                                                  ஸஹா றிஸ்வான் 

Sunday, August 29, 2010

நீ
அனிந்து வரும்
ஹபாயாவே
இன்று என்னை
புத்தகம் நடுவே
கவிதை எழுதவைக்கிறது  

Saturday, August 28, 2010

நட்பா காதலா?










வார்த்தைக்குள் பொடி
வைத்தவனே -உன்
வரைதாலில் இடிவைத்தாயோ
இப்படி வெடிக்கிறது

புரியவில்லை
சத்தியகமாகப் புரியவில்லை
அதைப்புரிந்து கொள்ளவும்
முடியவில்லை

உன் 
புதிருக்குள் சிக்குன்டு
தினம் புமிக்குள் 
புதைகிறேன்
உயிரைக் குடிக்கும் உயிரே
உன் உறவை -ஏன் 
மறந்தாய்
கனவில் வாழும் மானே
உன் காதல் வாழ்க்கை என்ன?

பதில் சொல்லத்துடிக்கிறேன் 
துயில்கொள்ளமறுக்கிறேன்
சீக்கிரம் வந்து நீ
சீர்திருத்தம்
செய்வாயா?  
                                    (என்னள்சுவடுகள்)   

Thursday, August 26, 2010

சிறு கவிதைகள்.

சில நேரங்களில்
எனக்கு சந்தோஸம்
ஏன் தெரியும?
என்னைவிடக் காக்கை
கறுப்பு என்பதால்.

        
      முள்ளிருக்கும் ரோஜாவை
      எனக்குப் பிடிப்பதில்லை
      முள்ளில்லாத 
      ரோஜாவாய்
      அவள் இருப்பதால்.  

            

                       உனது நிழற்படம்                


         ஈா் ஜந்து மாதம்
         எம்மைச் சுமந்த நீயே
         எம்மை விட்டுப்போன பிறகும்
         உன் நிழற்படம் எம்மை
         ஆறுதல் படுத்துகிறது
                                                  உன்னை விட
                                                  உன் நிழற் படத்திற்கு
                                                  எம் மேல் அன்பு  
         அதிகம் போல.  

                                    ஸஹா றிஸ்வான்.

காணிக்கை



என்
மரணத்தன்று குட
நீ ஒரு துளிக்கண்நீரும்
சிந்த வேண்டாம்.
ஏன் தெரியுமா?
அன்று உன்
திருமணத்தன்றாய்
                                     இருக்கும்.   
                          
                                                       ஸஹா றிஸ்வான்