Monday, September 6, 2010

ஏமாற்றம்


கடற்கரை மணலில்
கரைஒதுங்கிய நாட்களை
கலைக்கத்தான்
முடியவில்லை
இன்னும் 
காயமுட்டுகிறது
கண்ணாடி வின்பமாய்

கவிபாடி கதைசெல்லி
கவுன்டு புரண்ட
கரை மணலில் 
கால்தடம் இன்னும்
கரைசேர வில்லை-ஆனால்
கலைந்து விட்டதே
காதல்

பழகிய நாட்களை
பாழாக்கத்தான்
முடியவில்லை
படுக்கையிலும் 
பதர்கிறது
பாவப்பட்ட இதயம்

பித்தலாட்டமாய் போன
காதலை என்னி
பித்துப்பிடித்து விட்டது
என் ப்ரியமான
ப்ரியத்துக்கு கூட

சின்னப் பிரிவுகள் கூட
என்னைச் சிதறடிக்குமோ
என்றென்னி
மெட்டவிழ்ந்த
வார்த்தைகளை
மென்மையாகப் பேசி
சிரித்தபடி விடை
பெற்றேன் சின்னப்பிரிவுக்குப்
பயந்து


கற்றுத்தந்தாய்
உன் காதலில்
சின்னவார்த்தைகளில்
பிரிவு தலைவிரிக்கும்
என்பதை ஆனால் நீ
கற்றுத்தர வில்லையே
உன் திருமண அழைப்பிதழில்
என் தலைவெடிக்கும்
என்பதை.


இருந்தும்
காதல் நுாலகத்தை
கரைத்துக்குடித்த மேதை-நீ
காதல் நுாலகத்தை
கற்கமறந்த பேதை-நான்


























































































































No comments:

Post a Comment